துரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
196Shares

இன்று துரித உணவுகள் என்னும் ஜங் உணவுகள் நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

மக்கள் இந்த துரித உணவுக்கே அடிமையாகி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் வயது வந்தவர்கள் அனைவரும் துரித உணவுகள் அன்றாடம் விரும்பி உண்ணுகின்றனர்.

இந்த துரித உணவில் மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகமிக குறைவாக உள்ளது.

அதே சமயம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கலோரி, அதிக கொழுப்பு அதிக சர்க்கரை போன்றவை இதில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வைட்டமின், தாதுக்கள் மிக குறைந்த அளவிலே உள்ளது. எனவே இந்த துரித உணவுகள் அதிக ஆரோக்கிய கேட்டையே ஏற்படுத்துகிறது.

மேலும் துரித உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், சுவை குறைந்து விடுகிறது.

இதைத் தவிர்க்கும் பொருட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் அதன் சுவையை தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம் வண்ணங்கள் போன்றவற்றை சேர்க்கிறார்கள். இது மனித உடலுக்கு பல வகையில் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது.

அந்தவகையில் தற்போது துரித உணவுகளால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

shutterstock
  • துரித உணவை உண்பதின் மூலம் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றங்கள் உண்டாகலாம்.
  • துரித உணவில் உள்ள அதிக கொழுப்புகள் கடுமையாக இதயத்தை பாதிக்கின்றது.
  • உடனடி உணவுகல் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவர்றைப் பாதிக்கும்.
  • துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சியைக் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் செய்கிறது.
  • துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும்.
  • ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்னைகள் ஏற்படும்.
  • தலைவலி மனச்சோர்வு, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும்.
  • நொறுக்குத்தீனி துரித உணவுக் எடுத்த கொள்ளுவதனால் இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்