யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஆயுர்வேதத்தில் பூண்டு நோய்களை குணப்படுத்தும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு நமது உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது.

குறிப்பாக கொலஸ்ட்ராலைக் குறைப்பது, சளியை அகற்றுவது, புற்றுநோய் செல்களை அழிப்பது, இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, கல்லீரலைப் பாதுகாப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை வழங்கக்கூடியது.

பூண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும், இது அனைவருக்கும் நன்மை அளிக்கும் என்று சொல்ல முடியாது.

ஒருசில பிரச்னைகள் இருப்பவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாதாம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது.

அந்தவகையில் யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

hindi.indiatvnews
 • பூண்டில் உள்ள சில கூறுகள் வயிறு மற்றும் குடல்களைத் தூண்டிவிடும், செரிமான பாதையில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும். இதன் விளைவாக ஹெபடைடிஸ் நோயாளிகளிடம் குமட்டல் அறிகுறி அதிகரிக்கும். இதனால் இவர்கள் பூண்டை தவிர்ப்பது சிறந்தது.
 • வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், பூண்டு கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் பூண்டில் உள்ள காரப் பண்புகள், குடலைத் தூண்டிவிடும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு இன்னும் தீவிரமாகி, நிலைமை மேலும் மோசமாகும்.
 • க்ளுக்கோமா, கண் புரை, வெண்படல அழற்சி மற்றும் பிற கண் நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட டயட்டில் குறைவான அளவிலேயே பூண்டு சாப்பிட வேண்டும்.
 • பூண்டுகளை அதிகமாக அன்றாடம் எடுத்தால், அதனால் மோசமான கண் பார்வை, நினைவிழப்பு போன்ற மோசமான அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும்.
 • நற்பதமான பூண்டு பற்களை வெறும் வயிற்றில் உட்கொண்டால் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகளால் அவஸ்தைப்படக்கூடும். மேலும் பூண்டில் உள்ள குறிப்பிட்ட கூறுகள் இரைப்பை உணவுக்குழாய் அழற்சி நோயை உண்டாக்குமாம்.
 • ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள சல்பர் என்னும் பொருள் தான்.
 • பூண்டுகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, அத்துடன் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளான ஆஸ்பிரின் போன்றவற்றை எடுப்பவராயின், உடல் நிலைமை மோசமாகும். ஏனெனில் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் பூண்டு சேரும் போது, உடலினுள் இரத்த கசிவின் அபாயம் அதிகரிக்கும்.
 • கர்ப்பிணிகள் அதிகம் பூண்டு சாப்பிட கூடாது ஏனெனில் அது விரைவில் பிரசவ வலியை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகம் உட்கொண்டால், தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்க மறுக்க வாய்ப்புள்ளது.
 • பூண்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த அழுத்தம் ஒருவருக்கு மிகவும் குறைவாக இருந்தால், அவர்கள் அடிக்கடி தலைச்சுற்றி மயக்கம் போடக்கூடும்.
 • பூண்டுகளை ஒருவர் பல வருடங்களாக அதிகம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கக்கூடும்.
 • யோனியில் ஏற்பட்ட ஈஸ்ட் தொற்றுக்களை சரிசெய்ய பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் பூண்டு அதிகம் சாப்பிட்டால், யோனியில் உள்ள மென்மையான திசுக்களை எரிச்சலூட்டப்பட்டு, ஈஸ்ட் தொற்று நோயை தீவிரமாக்கிவிடும்.
 • பூண்டு பற்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், கண்ணின் முன்புற அறைக்குள் இரத்தக் கசிவை ஏற்படுத்தும் ஒரு நிலை (கருவிழி மற்றும் கார்னியாவிற்கு இடைப்பட்ட இடைவெளி). இந்த நிலை தீவிரமானால் பார்வையையே இழக்கக்கூடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்