ஒரே வாரத்தில் குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் உணவுகள்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

மீன்களில் காணப்படும் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட புரதங்களை உணவில் சேர்த்துவந்தால் ஒரே வாரத்தில் குடல்புற்றுநோய் தாக்கம் குறைவடையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் என்பவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்த மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்விற்காக 476,160 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் குறிப்பிட்ட சில உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பிலான கேள்விக்கொத்துக்கள் வழங்கப்பட்டு விடைகள் பெறப்பட்டது.

இவர்களில் வெள்ளையான, கொழுப்பு நிறைந்தது மற்றும் எண்ணெய்த் தன்மைவாய்ந்த மெல்லிய மீன்களை உணவாக உட்கொண்டவர்கள் குடல்புற்றுநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாரம் தோறும் ஏதாவது ஒரு மீன் வகையை 63.49 கிராம்களிலும் குறைவாக உண்பவர்களிலும் பார்க்க வாரத்திற்கு 359.1 கிராம்களை உண்பவர்களை குடல் புற்றுநோய் தாக்கும் ஆபத்து 12 சதவீதத்தினால் குறைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று வாரத்திற்கு 123.9 கிராம் வரையான எண்ணெய் மீன்களை உண்பவர்கள் 10 சதவீதத்தினால் குடல்புற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்