நெஞ்செரிச்சலை எளிதில் தடுக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வயிற்றில் உள்ள அமிலம் மேலேறி உணவுக் குழாய்க்கு வரும் பொழுது உணவுக்குழாயின் உள் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

உணவு உண்ணும்போது, உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவது, குரல்வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நீடிப்பது, இரவு தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டு இருமுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

இத்தகைய நெஞ்செரிச்சலை மருந்துகளை விட ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும்.

எனவே இந்த பிரச்னைகளை சரி செய்யும் இயற்கை மருத்துவங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

Google
  • நெஞ்செரிச்சல் பிரச்னைகள் வந்தால், துளசி இலை சாறை அருந்தினால், உடனே நிவாரணம் கிடைக்கும்.
  • சோம்பு ஜீரண சக்தி கொண்டது. இதை நாம் நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் மென்று, தின்னு வந்தால், உடனே சரியாகும்.
  • ஜீரண சக்தியை தூண்டுவதில் பட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. பட்டை பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால், வயிற்று எரிச்சல் அடங்கும்.
  • மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.
  • கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
  • இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.
  • தினமும் போதுமான அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்