சர்க்கரை நோயாளிகளே! நீங்கள் மீந்து போன சப்பாத்தியை சாப்பிடுங்க.. அற்புதம் நடக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

மீந்து போன பழைய சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் சோடியம் குறைவாக இருப்பதால், ஸ்நாக்ஸாக சாப்பிட ஏற்றது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுவது தான் மீந்து போன சப்பாத்தி.

இந்த மீந்து போன சப்பாத்தியை சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

  • இரவில் சுட்டு மீந்து போன சப்பாத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
  • மீந்து போன பழைய சப்பத்தியை பாலில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சாப்பிடுங்கள். இது சுவையான ஸ்நாக்ஸாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
  • மீந்து போன பழைய சப்பத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் வெப்பநிலையை இயல்பாக்கும் மற்றும் உடல் வெப்பநிலை அதிகமாகாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பழைய சப்பாத்தி அசிடிட்டியை கட்டுப்படுத்தவும் செய்யும்.
  • அசிடிட்டி, அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை போன்ற வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும். அதற்கு மீந்து போன சப்பாத்தியை பாலில் ஊற வைத்து, இரவு உணவாக சாப்பிடவும்.
  • மீந்து போன சப்பாத்தியை தூக்கி போடுவதற்கு பதிலாக, அதை சிறு துண்டுகளாக்கி, சிறிது பால் சேர்த்து, ஊற வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு

சப்பாத்தி சுட்டு 15 மணிநேரத்திற்குள், சுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் உள்ள சப்பாத்தியை மட்டுமே சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்