தொப்பைக் கொழுப்புகளை ஆரோக்கியமான முறையில் குறைக்க இதை செய்தால் போதுமே!

Report Print Kabilan in ஆரோக்கியம்
736Shares

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடையை, ஆரோக்கியமான முறையில் எப்படி குறைப்பது என்பது குறித்து இங்கு காண்போம்.

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது மட்டுமின்றி, எடையைக் குறைத்து உடலியக்க வேகத்தை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்துள்ளன.

எனவே, எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுத்து உண்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தொப்பைக் கொழுப்புக்களை உடலுக்கு ஆற்றலாக (abs) மாற்ற உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு

டயட்டில் இருக்கும்போது மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளை உடலில் சேர்க்கும்போது, அதிகப்படியான கொழுப்புக்கள் எளிதில் நீங்கி தொப்பை abs ஆக மாறும். அத்துடன் இதய பிரச்னைகளின் அபாயம் மற்றும் உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும்.

எனவே மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகளான அவகேடோ, நட்ஸ், பாதாம், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து

பீட்டா-க்ளுட்டன் மற்றும் க்ளுக்கோமானன்கள் ஆகிய கரையக்கூடிய நார்ச்சத்துக்களை அதிகளவு எடுப்பதன் மூலம் தொப்பை கொழுப்புக்கள் குறையும். அத்துடன் உடலில் கொழுப்புகள் சேராமலும் தடுக்கப்படும். மேலும் இந்த வகையான நார்ச்சத்து உணவுகள் செரிமானத்தை தாமதமாக்கி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

புரோட்டீன்

உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் பசி உணர்வு குறையும். இந்த வகையான உணவுகள் அதிகளவு கலோரிகளை கரைக்க உதவும். சிக்கன், மீன், பால் பொருட்களில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது.

ராஸ்ப்பெர்ரி கீட்டோன்

ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, கிரான்பெர்ரி ஆகியவற்றில் கீட்டோன்கள் எனும் சத்துக்கள் உள்ளன. இவற்றை உட்கொள்ளும்போது தசைகளின் செயல்பாட்டிற்கும், கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனான அடிகோநெக்டின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.

எபிகல்லோகாடெசின் காலேட்

கிரீன் டீ, கிரான்பெர்ரி, பேரிக்காய், ஹாசில்நட்ஸ் ஆகியவற்றில் எபிகல்லோகாடெசின் காலேட் (EGCG) எனும் உட்பொருள் உள்ளது. குறிப்பாக கிரீன் டீயில் இது அதிகளவில் உள்ளது.

இவற்றின் மூலம் உட்காயங்களைக் குறைக்கலாம். அத்துடன் எடையைக் குறைப்பதுடன், இதயம் மற்றும் மூளை நோய்களையும் தடுக்கலாம். மேலும், இந்த உட்பொருள் அதிகப்படியான கலோரிகளை எரிப்பதன் மூலம் தெர்மோஜெனீசிஸை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்