உடல் எடை குறைப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் இரகசிய பானம் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
593Shares

இன்றைய காலகட்டதில் அதிகமானவர்கள் தமது உடல் எடை குறைப்பிற்காக போராடிவருகின்றார்கள்.

இதற்காக கடினமான வழிமுறைகள் காணப்படுகின்ற போதிலும் பலர் இலகுவான வழிமுறைகளையே எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு சீனர்கள் பயன்படுத்தும் ஒரு வகை பானம் பெரிதும் கைகொடுக்கும்.

அதாவது Puerh தேநீரை சீனர்கள் தொடச்சியாக பயன்படுத்திவருகின்றனர்.

இதன் காரணமாகவே அவர்கள் பெரும்பாலும் மெல்லிய தோற்றத்தினை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

Puerh தேநீர் என்பது கிரீன் டீ, பிளாக் டீ மற்றும் வைட் டீ போன்றதொரு டீ வகைதான்.

இந்த தேநீரானது Camellia sinensis எனும் ஒரு வகை மரத்திலிருந்து பெறப்பட்ட இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

இத் தேநீர் உடலிலுள்ள இரத்தத்திலுள்ள நச்சுப்பதார்த்தங்களை அகற்றி சுத்தமாக வைத்திருப்பதுடன் ஆரோக்கியமான உணவுச் சமிபாட்டிற்கும் உதவுகின்றது.

அதேபோன்று அன்டிடெக்ஸினாக செயற்பட்டு பல்வேறு நோய்த்தாக்கங்களிலிருந்து உடலையும் பாதுகாக்கின்றது.

இது தவிர மேலதிக கொழுப்பு உடலில் உற்பத்தி செய்வதை தடுப்பதுடன் சேமிக்கப்படுவதையும் தடுக்கின்றது.

இந்த Puerh தேநீரை உணவு உட்கொண்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து குடித்துவந்தால் உடல் எடை குறைப்பில் சிறந்த பெறுபேற்றினைப் பெற முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்