பித்தப்பை கற்கள் மாயமா மறைய வேண்டுமா? அப்ப தினமும் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
351Shares

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது என சொல்லப்படுகின்றது.

வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும் இது இதன் அறிகுறிகளாகும்.

அந்தவகையில் இதனை கரைக்க அறுவை சிகிச்சை இருந்தாலும் இதனை எளிய முறையில் அந்த கற்களை இயற்கையாக கரைக்க முடியும்.

தற்போது அதில் ஒருசில இயற்கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

  • ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் தொடர்ந்து பித்தப்பைக்குள் செல்லும் போது, பித்தக்கற்கள் மெதுவாக கரைய ஆரம்பித்துவிடும்.
  • ஒரு கப் டான்டேலியன் இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, அத்துடன் 1/4 கப் மில்க் திஸ்டன் இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தைக் குடித்தால் பித்தக்கற்களை விரைவில் கரையும்.
  • காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை நீரில் போட்டு அறை வெப்பநிலையில் வைத்து, தினமும் மாலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
  • 1/2 டம்ளர் சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, எஞ்சிய பாதியில் பேரிக்காய் ஜூஸ் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் பேரிக்காயில் உள்ள பெக்டின், பித்தக்கற்களை இயற்கையாக கரைத்துவிடும்.
  • சில புதினா இலைகளை சுடுநீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை குடித்தால், பித்தக்கற்கள் கரைத்துவிடும்.
  • ஹெர்பல் டீ தயாரிப்பதற்கு 4-5 விருப்பமான ஏதேனும் மூலிகை இலையை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்