கொழுப்பு கட்டி எளிதில கரையனுமா? இதோ இயற்கை மருத்துவம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும்.

இதனை லிபோமா என்று அழைக்கப்படுகின்றது.

குறிப்பாக மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளது.

இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. இருப்பினும் இதனை இயற்கை முறையிலும் கரைக்க முடியும்.

அந்தவகையில் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் பல உள்ளது. தற்போது அதில் சிலவற்றை பார்ப்போம்.

  • கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.

  • ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.

  • கொடிவேலி மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.

  • கொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்