உடற்பயிற்சி இல்லாமல் 7 நாட்களில் தொப்பையை குறைக்க எளிய வழிகள்!

Report Print Kabilan in ஆரோக்கியம்

உடலில் தேங்கும் கொழுப்பை இயற்கையான முறையில் குறைப்பதற்கான வழிகள் குறித்து இங்கு காண்போம்.

அதிகளவு கொழுப்புள்ள உணவுகளை உண்பதால், உடலில் கொழுப்பு சேர்கிறது. குறிப்பாக அடி வயிற்றில் தேவையில்லாத சதையாக தங்குகிறது.

சில வகை உடற்பயிற்சிகளின் மூலம் இந்த கொழுப்பை குறைக்கலாம். ஆனால், பலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கு தற்போதைய சூழலில் நேரமில்லை.

எனவே, சில இயற்கையான வழிமுறைகள் மூலம் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கும் வழிகளை இங்கு காண்போம்.

தொப்பை வருவதற்கான காரணங்கள்
  • மோசமான டயட்
  • மோசமான வளர்சிதை மாற்றம்
  • மன அழுத்தம்
  • தவறான நிலை
  • உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இல்லாமை
மனநிலை மாற்றம்

மனநிலை தான் ஒட்டுமொத்த உடலையும் இயக்குகிறது. மனம் நடந்துகொள்ளும் விதம் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.

மனம் நினைத்தால் நிச்சயம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக முடிக்கும். எனவே, உங்கள் குறிக்கோள் தொப்பையைக் குறைப்பது என்பதால், முதலில் நீங்கள் உங்கள் மனதை அமைதிபடுத்த வேண்டும்.

நேர்மறையான சிந்தனை, தொப்பையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஆகியவற்றை நீங்கள் வைத்திருந்தால், உங்கள் எண்ணத்தைப் போன்றே உடலும் செயல்பட ஆரம்பிக்கும்.

நார்ச்சத்துக்கள்

நார்ச்சத்துக்கள் டயட்டில் பழங்கள் மற்றும் சாலட் அதிகளவில் இருக்க வேண்டும். மேலும் அதிகளவு கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்து, முழு தானிய உணவுகள் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து உணவுகள் உடலில் மெட்டபாலிசத்தை சிறப்பாக இயங்க வைக்கும். அத்துடன் பசி உணர்வை கட்டுப்படுத்தும். எனவே உடலில் கொழுப்புகளில் தேக்கம் குறையும்.

தண்ணீர்

தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை சீராக்க மிக முக்கியமான பொருளாகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, தினமும் 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். இதன்மூலம் உடல் எடை சீராக இருக்கும்.

எலுமிச்சை மற்றும் சுரைக்காய் ஜூஸ்

எலுமிச்சை, சுரைக்காய் ஜூஸ் ஏழு நாட்களில் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவும். சுரைக்காயில் உள்ள கலோரிகள் மிகவும் குறைவு. அத்துடன் வைட்டமின்கள் சி, ரிபோஃப்ளேவின், டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் இதர ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே, சுரைக்காய் ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் ஒரு தம்ளர் பருகுங்கள்.

ஆரோக்கியமான உணவு

தொப்பையைக் குறைக்கிறேன் என்று உணவு உண்ணாமல் இருப்பது தவறான ஒன்றாகும். ஏனெனில், 7 நாட்கள் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் கூட, தொப்பை குறைவதற்கு பதிலாக உடலில் ஆற்றல் கிடைப்பதற்கான தசைத் திசுக்கள் உடைத்தெறியப்படும்.

எனவே ஆண்கள் ஒரு நாளைக்கு 1,700 கலோரி உணவையும், பெண்கள் 1,500 கலோரி உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை உணவுகள்

ஒருவரது டயட்டில் சர்க்கரை அதிகமாக இருந்தால், உடலில் இன்சுலின் அளவு அதிகரிப்பதோடு, அடிக்கடி பசியுணர்வும் ஏற்படும். எனவே ஏழு நாட்களில் தொப்பையைக் குறைக்க விரும்பினால், சர்க்கரை உணவை தவிர்க்க வேண்டும்.

தூக்கம்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் அயராது உழைத்த பின், 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

போதுமான தூக்கத்தை எப்போதும் பெறாமல் இருந்தால், அவரது உடலில் ஹார்மோன்கள் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, நாம் நினைத்திராத பல தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும். எனவே, போதுமான அளவு தூக்கம் உடல் எடை குறைப்பில் அவசியம்.

கொழுப்பைக் கரைக்கும் எண்ணெய் மசாஜ்

கொழுப்பைக் கரைக்கும் மசாஜ் எண்ணெய்யைக் கொண்டு வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஏழு நாட்கள் செய்தால், தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய், 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து இந்த மசாஜை மேற்கொள்ள வேண்டும். இதனால் கொழுப்பு செல்கள் கரைந்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்