உடல் எடையை குறைக்க வேண்டுமா? செலரி சூப் இருக்கே

Report Print Santhan in ஆரோக்கியம்

தற்போது இருக்கும் அவசர உலகில் பெரும்பாலான மக்கள், உணவு பழக்க வழக்கங்களை சரியாக எடுத்து கொள்ளாத காரணத்தினால், அவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அதன் பின் அந்த எடையை குறைப்பதற்கு படாத பாடு படுகின்றனர்.

இந்நிலையில் கெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் செலரி சூப் குடித்து வரலாம்.

தேவையான பொருட்கள்

செலரி கீரை - 2

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

பூண்டு - 2 பல்,

தக்காளி - ஒன்று

சிவப்பு ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

செலரியின் அடிப்பகுதியை நீக்கிவிட்டு அலசி, தண்டு, இலையை மட்டும் பொடியாக நறுக்கவும்.

தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ராஜ்மாவை ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து கொள்ளவும்.

வேக வைத்த ராஜ்மாவை மிக்சியில் போட்டு அதனுடன், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, முக்கால் கப் செலரி கீரை, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து வடிகட்டி கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும்.

மீதமுள்ள செலரி இலைகளைத் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான சத்தான செலரி சூப் ரெடி.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்