தினமும் இரண்டு முறை இந்த டீயை குடித்து பாருங்கள்.. தொப்பையை எளிதில் குறைத்து விடலாமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக இன்றைய காலகட்டதில் தொப்பை பிரச்னையால் பலரும் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்.

விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல், விரும்பிய உணவுகளை உண்ண முடியாமல் பலரும் பல வழிகளில் கஷ்டப்படுகின்றனர்.

அதற்காக என்னத்தான் உடற்பயிற்சி செய்தாலும் கடின டயட்டுகளை பின்பற்றினாலும் ஓரளவு தான் தொப்பையை குறைக்க முடியும்.

உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு பல உணவுப் பொருட்கள், பானங்கள், உடற்பயிற்சிகள் உள்ளன.

இவை அனைத்தின் உதவியுடனும் தொப்பையை நிச்சயம் குறைக்க முடியும்.

அந்தவகையில் தொப்பையை வேகமாக குறைக்க நெல்லிக்காயில் தயாரிக்கப்படும் டீ பெரிதும் உதவி புரிகின்றது.

தற்போது இந்த அற்புத டீயினை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • தண்ணீர் - 1 1/4 கப்
  • நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - சிறிது
  • தேன் - சுவைக்கேற்ப
செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் நெல்லிக்காய் பொடி மற்றும் இஞ்சி சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீரானது ஒரு கப் அளவிற்கு நன்கு சுண்டியதும், அடுப்பை அணைத்து வடிகட்டி, சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

பின் அந்த பானத்தில் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

குறிப்பு

முக்கியமாக நெல்லிக்காய் டீயை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், தொப்பை (கொழுப்பு) வேகமாக குறையும் மற்றும் உடல் எடையும் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்