வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட வேண்டுமா? இதோ சில எளிய வைத்திய முறைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கின்றது.

குறிப்பாக வாத நோய் என்பது பெண்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக தாக்கும் ஒன்றாக உள்ளது.

இதனை உணவின் மூலமாக எளிய முறையில் தடுக்க முடியும். தற்போது இதனை எப்படி தடுக்கலாம்

  • அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து உணவு உண்பதற்கு முன்னர் அருந்தி வந்தால் வாயுத்தொல்லைகள் விலகிச் செல்லும்.
  • காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தேவையான அளவு எடுத்து வறுத்து எடுத்து, இவற்றுடன் புதினா, வல்லாரை, புளி, உப்பு சேர்த்து அரைத்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்வுக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கலும் நீங்கும்.
  • சிறிது வாதநாராயண இலைகளை மையாக அரைத்து, மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாதக் கோளாறுகள் நீங்கும். இதன் இலை அல்லது காம்புகளை ரசம் வைத்து அருந்தினாலும் பொரியல் செய்து சாப்பிட்டாலும் வாத நோய் விலகும்.
  • கைப்பிடி அளவு கோதுமை மாவை இளம் வறுப்பாக வறுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதத்தால் வரக்கூடிய வலிகள் மட்டுமல்லாமல் மூட்டுவலியும் விலகும்.
  • 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீர் போட்டு 200 மி.லியாகக் காய்ச்சி 100 மி.லி வீதம் காலை மாலை சாப்பிட்டுவந்தால் நாள்பட்ட வாதம் விலகும்.
  • சாமை அரிசியை சமைத்தோ, கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.
  • வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வாத நோய் தணியும்.
  • நொச்சி இலை மற்றும் வேப்பிலைகளை காய்ச்சி குளித்து வந்தால் வாத நோய்கள் விலகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்