ஆலிவ் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிங்க... நன்மைகள் ஏராளமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெயும் ஒன்றாகும். இதில் முழுக்கமுழுக்க நல்ல கொழுப்பு மட்டுமே இருக்கிறது.

ஆலிவ் எண்ணை உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிப்பதனால் உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகின்றது.

அந்தவகையில் இவற்றின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

தேவையானவை
 • 1/ 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
 • 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
தயாரிக்கும் முறை

அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் ஃப்ரெஷாக பிழிந்த எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் கலக்குங்கள்.

அரை ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு போதும். அதற்கு மேல் எடுக்க வேண்டாம்.

இந்த சாற்றினை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் சாப்பிட வேண்டும்.

வாரம் 3 நாட்கள் அல்லது வாரம் ஒரு தடவை எடுத்துக் கொண்டால் போதும். இப்படி குடிப்பதால் பலவித நன்மைகளை தருகின்றது.

நன்மைகள்
 • இதனை குடிக்கும்போது, இதிலுள்ள ஆலிவ் எண்ணெய் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மலமிலக்கியாகவும் செயல்படுகிறது. எலுமிச்சை சாறு நச்சுக்களை அழித்து சுத்தம் செய்கிறது. இதனால் மலச்சிக்கலிலிருந்து வேகமாக குணமடைவீர்கள்.
 • இந்த சாறை குடிக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய்கள் தடுக்கப்படும். குறிப்பாக வெரிகோஸ் நரம்பை தடுக்கிறது.
 • ஆலிவ் மற்றும் எலுமிச்சை கலவை குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் தடுக்கப்படுகிறது. கல்லீரலை மொத்தமாக சுத்தப்படுத்தும் க்ளென்சராக விளங்குகிறது.
 • உடலில் அதிகப்படியாக சுரக்கும் அமிலங்களின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. வயிற்றினுள் உண்டாகும் அழுத்தத்தை குணபப்டுத்துவதால் வயிற்றுப் பிடிப்பு, வாய்வு, அசிடிட்டி , நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகிவிடும்.
 • தினமும் உங்கள் உடலில் உருவாகும் நச்சுக்கள் சேர்ந்து கிலோ கணக்கில் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை ச்சுக்களை முற்றிலும் அகற்றும் தன்மை கொண்டது.
 • ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் விகிதத்தை சீர்படுத்துகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து செரிமானத்திற்குட்படுத்துகிறது.
 • மூட்டு இணைப்புகளில் இருக்கும் சவ்வுகளில் நெகிழ்வுத்தன்மை குறைந்தால் மூட்டு உராய்வு ஏற்பட்டு தேய்மானம் உண்டாகும். ஆலிவ் எண்ணெய் இதனை தடுக்கிறது. மூட்டுஇணைப்புகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
 • வயிற்றுக் கொழுப்பை கரைக்க இந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு உதவி செய்கின்றது.
 • கல்லீரலின் செயலை வகுவாக்குகிறது. பித்தப்பையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. மேலும் உடலில் மிக முக்கியத் தேவையான வளர்சிதை மாற்றத்தை குறிப்பாக கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 • உயர் ரத்த அழுத்தம் சம நிலைக்கு வருகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் மினரல் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
 • இது இதயத் துடிப்பை சீர் செய்கிறது. இதய நோய்கள் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
 • மோனோ அன்சாச்சுரேட்டர் கொழுப்பு உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு அத்தியாவசிமானது. ஆகவே சிறு நீரகம், கல்லீரல், ஜீரண மண்டலம் போன்றவை நன்றாக செயல்படுகிறது.
 • செரிமானமின்மை மற்றும் பலவேறு அஜீரணக் கோளாறுகளுக்கு என்சைம் எனப்படும் நொதிகள் சீராக சுரக்காததால்தான் காரணம். இந்த கலவை நொதிகளை சீராக சுரக்க உதவுகிறது.
 • என்றும் இளமையாக இருப்பதை இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின் சி உங்களை வசீகரமாக வைத்துக் கொள்ளும்.
 • சருமம் மற்றும் கூந்தலுக்கு தடவவும். இது ஆரோக்கியமான நகம் சருமம், மற்றும் கூந்தலை வளரச் செய்கின்றது.
 • ஆலிவ் எண்ணெய் நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை குறைக்கும். மன அழுத்தத்தை தடுக்கிறது. மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
 • சர்க்கரை வியாதியை தடுக்கும் முக்கிய கொழுப்பான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் ஆலிவ் எண்ணெயில் இருப்பதால் சர்க்கரை வியாதியை இது முற்றிலும் தடுக்கின்றது.
 • மாதம் ஒருமுறை கல்லீரல் சுத்தப்படுத்த இதனை சாப்பிடலாம். அரை ஸ்பூன் பதிலாக கால் கப் ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து அதனை குடிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்