மன அழுத்தம் மற்று உடல் சோர்வில் இருந்து விடுபடனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஒரு சிலருக்கு, எந்தவித காரணமும் இல்லாமலும் மன அழுத்த ஏற்படலாம். இதன் போது உடல் சோர்வு ஏற்பட்டு விடுகின்றது.

மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் சோர்வு, எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல், தசைகளில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் இதயத் துடிப்பு, தலைவலி போன்ற சில உடலியங்கியல் பிரச்சனைகளும் காணப்படும்

இதனால் அலுவலகத்திற்கு தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இதனை சில உணவுகள் சாப்பிடுவதன் மூலம் சரி செய்ய முடியும். தற்போது இந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பூசணி வகை உணவுகளான தர்பூசணி, முழாம்பழம், பூசணிக்காய் போன்ற நீர்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடும்போதுன் உடனடியாக மன அழுத்தம் குறையும்.
  • மன அழுத்தம் உண்டாவதால் நரம்புகள் பாதிப்படைந்து இன்னும் இறுக்கத்தை ஏற்படுத்தும் போது ல மன அழுத்தம் தீவிரப்படும். அந்த சமயத்தில் வெதுவெதுப்பான பால் குடிப்பதால் நரம்பு மண்டலம் தளர்வடையும். மேலும் மன அழுத்தம் குறையும்.
  • ஓட்ஸில் நல்ல தரமான கார்போஹைட்ரேட் இருக்கிறது. க்ளைகோஜனாக அது சேமிக்கப்படுவதால் தசைகளுக்கு சக்தியை அளிக்கிறது. இதனால் உடல் சோர்வு மறையும்.
  • பீன்ஸில் அதிக மெக்னீசியம் இருக்கிறது. அது மூளையில் உள்ள அயனிகளை சமன்படுத்துவதால் மூளை அமைதி பெறும். மன அழுத்தம், சோர்வு குறையும். ஆகவே மெக்னீசியம் அதிகமுள்ள உணவுகளை தேடி சாப்பிடுங்கள்.
  • சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும். நரம்பு மண்டலத்தை சீராக்கும். அமைதியை தரும். உடலில் நீர்ச்சத்தை இழக்காமல் காக்கும். இதனால் உடல் சோர்வு தடுக்க முடியும்.
  • நட்ஸ் மனம் உடல் சோர்வுகளை போக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். வறுத்த கடலை, பிஸ்தா போன்றவை இழந்த அயனிகளை மீட்கச் செய்யும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். உடல் பலம் பெறும்.
  • காளானில் அதிக பி6, நியாசின், போன்றவை அதிகம் உள்ளதால் உடலுக்கு சக்தி தர விட்டமின் பி தேவை. இந்த விட்டமினை அதிகம் கொண்ட மஷ்ரூம் சாப்பிடுவதால் உடல் சோர்வை உடனடியாக போக்க முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்