பீட்ரூட்டை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பீட்ரூட் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு காயாகும். இதனை பிடிக்காதவர் எவருமே இல்லை என்று சொல்ல முடியும்.

பீட்ரூட் காய் பல அத்தியாவசியமான சத்துக்களை கொண்ட ஒரு காய்வகையாகும்.

பீட்ரூட்டில் அதிகளவு மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.

இருப்பினும் இதனை அதிகளவு சாப்பிடுவதனால் உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் பீட்ரூடை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்.

  • அதிகளவு பீட்ரூட் சாப்பிடுவது உங்கள் சிறுநீரின் நிறத்தை மாற்றக்கூடும். இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் ஏற்படும்.
  • பீட்ரூட்டில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் உள்ளது, இதனால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • பீட்ரூட் சாப்பிடுவதால் சிலருக்கு தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல் போன்ற எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் குரல் வளையங்களில் சுருக்கம் கூட ஏற்படலாம்.
  • பீட்ரூட்டில் இதிலிருக்கும் நைட்ரேட்டுகள் உங்கள் இரத்த அழுத்தத்தில் திடீர் சரிவை ஏற்படுத்தும். மேலும் இது உங்கள் இரத்த நாளங்களை நீர்த்துப் போக செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
  • இரைப்பை கோளாறுகளால் ஏற்கனவே பாதிப்பட்டிருந்தால் பீட்ரூட் சாப்பிடுவது உங்களை நிலையை மோசமாக்கும். இதனால் வீக்கம், வாயுக்கோளாறுகள், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • இது குடல் இயக்கங்களை பாதித்து மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்துக்கள் வாயுப்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
  • பீட்ரூட்டில் கிளைசெமிக் குறியீடு மிதமான அளவில் உள்ளது, இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை பிரச்சினை இருப்பவர்கள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.
  • பீட்ரூட்டில் இருக்கும் பீட்டைன் கர்ப்பகாலத்தில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் கர்ப்பிணி பெண்கள் நைட்ரைட்டால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக 30 வாரம் முழுமையடைந்த கருவிற்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
  • அனைத்தும் உலோக சேர்மங்கள் உள்ளதால். இதனை அதிகம் சாப்பிடுவது உங்களின் கல்லீரல் மற்றும் கணையத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்