தினமும் ஒரு வேக வைத்த ஆப்பிளை சேர்த்து சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
231Shares

பழங்களில் ஆப்பிளை விரும்பாதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆப்பிளை பலரும் விரும்பி உண்ணுவார்.

அந்தவகையில் அதிலும் சிலர் தங்கள் உணவுப் பழக்கத்திலயே வேக வைத்த ஆப்பிளை சேர்த்து வருகின்றனர்.

ஏனெனில் வேக வைத்த ஆப்பிள் உணவு உங்கள் உட்கொண்டால் உங்கள் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது எனப்படுகின்றது.

அதுமட்டுமின்றி பல நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.

அந்தவகையில் வேக வைத்த ஆப்பிளை உட்கொள்ளுவதனால் வேறு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என பார்ப்போம்.

 • வேக வைத்த உணவில் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளதால் எனவே இது சீரண சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. எனவே நமது சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
 • இந்த வேக வைத்த உணவு எளிதாக சீரணிக்கும். இது உங்கள் சீரண சக்தியை மேப்படுத்தி சீரண மண்டல வேலையை சுலபமாக்குகிறது. சீரண ஹார்மோனை அதிகரிக்கிறது.
 • வேக வைத்த ஆப்பிள் உங்கள் மெட்டா பாலிக் அளவை அதிகரிக்கிறது . இதனால் அதிக ஆற்றல் நமது உடலுக்கு கிடைக்கிறது.
 • வேக வைத்த ஆப்பிளை சாப்பிட்டு உங்கள் உடல் எடையை பராமரிக்கலாம். இதன் நார்ச்சத்துகள் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 • வேக வைத்த ஆப்பிள் உங்கள் மலச்சிக்கலை சரி செய்கிறது. உணவில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மலம் வெளியேறுவதை இலகுவாக்குகிறது.
 • இது நெஞ்செரிச்சலை சரி செய்கிறது. உங்கள் வயிற்றில் அசெளகரியமான அறிகுறிகள் தென்பட்டால் வேக வைதத ஆப்பிளை பயன்படுத்தலாம். இதை நீங்கள் சாலட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.
 • வேக வைத்த ஆப்பிளில் கிடைக்கும் ஆற்றல் நீண்ட நேரம் இருப்பதால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி ஏற்படுவதில்லை. எனவே வயிறு நிரம்பிய எண்ணம் ஏற்படும்.
 • வேக வைத்த ஆப்பிள் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது ஒரு சிறந்த உணவாகும். இரத்த அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி போன்றவற்றை சரி செய்கிறது.
 • வேக வைத்த ஆப்பிள் உங்கள் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்பை கரைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே கருவில் வளரும் குழந்தைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவுகிறது.
 • வேக வைத்த ஆப்பிள் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சரியான விதத்தில் வைக்கிறது. எல்டிஎல் எனற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
 • இது நமது உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை இரத்தம் ஓட்ட வழியாக கொடுப்பதால் இதயம் செயலிழப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.
 • வேக வைத்த ஆப்பிள் நமது இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. எனவே தினமும் ஒரு வேக வைத்த ஆப்பிளை சேர்த்து கொள்ளுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்