தொடர்ந்து ஐந்து நாள் தர்பூசணியை இப்படி சாப்பிடுங்க.... உடல் எடையைக் குறைக்க முடியுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த உணவாக தர்பூசணி இருக்கின்றது.

தர்பூசணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், வைட்டமின் பி1, பி6, லைசோஃபின், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.

தர்பூசணி மிகக் குறைந்த அளவு கலோரிகள் கொண்ட பழமாகும்.

100 கிராம் தர்பூசணியில் வெறுமனே 30 கலோரிகள் தான் இருக்கின்றன. 0 சதவீதம் கொழுப்புச்சத்தும் 6 கிராம் அளவுக்கு சர்க்கரையும் கொண்டது.

அந்தவகையில் வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில் ஒரு நாளைக்கு எவ்வளவு தர்பூசணி வரை சாப்பிடலாம் என பார்ப்போம்.

முதல் நாள் டயட்

காலை உணவு - 2 முழு தானிய இட்லி (அ) தோசை, 1 பெரிய துண்டு தர்பூசணி, 1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி

மதிய உணவு - 100 கிராம் வேகவைத்த இறைச்சி, 1 கப் தர்பூசணி

இரவு உணவு - 60 கிராம் காட்டேஜ் சீஸ், 1 கப் வாட்டர்மெலன்

இரண்டாம் நாள் டயட்

காலை உணவு - ஒரு கப் வாட்டர் மெலன், 1 ஆப்பிள் அல்லது 2 துண்டு, கோதுமை பிரட், 1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி

மதிய உணவு - 100 கிராம் அளவுக்கு தோலுரித்து வேகவைத்த சிக்கன், 1 துண்டு வாட்டர் மெலன்

இரவு உணவு - 100 கிராம் அளவுக்கு பிடித்த ஏதாவது ஒரு மீன் கிரில் செய்தது, 1 துண்டு முழு தானிய பிரட் 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

மூன்றாம் நாள் டயட்

காலை உணவு - 1 பெரிய துண்டு தர்பூசணி, 1 ஆப்பிள் அல்லது 2 துண்டு, கோதுமை, பிரட் 1 கப் ஸ்கிம்டு மில்க்

மதிய உணவு - ஒரு கப் ஒயிட் பீன் சூப், 3 துண்டு தர்பூசணி

இரவு உணவு - வெஜிடபிள் சாலட், 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்.

நான்காம் நாள்

காலை உணவு - 2 பெரிய துண்டு வாட்டர்மெலன், 1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி, 1 முட்டை

மதிய உணவு - ஒரு பௌல் கிரீம் பிரக்கோலி சூப் அல்லது சிக்கன் சூப், 1 துண்டு முழுதானிய பிரட், 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

இரவு உணவு - 3 மீடியம் சைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு, 2 துண்டு வாட்டர்மெலன்

ஐந்தாம் நாள் டயட்

காலை உணவு - 3 துண்டு வாட்டர்மலன், 1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி, 1 வாழைப்பழம்

மதிய உணவு - 150 கிராம் வேகவைத்த இறைச்சி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாட்டர்மெலன்

இரவு உணவு - 1 துண்டு பிரட், 60 கிராம் காட்டேஜ் சீஸ், 3 பெரிய துண்டு வாட்டர்மெலன்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்