நீண்டகாலம் வாழ வேண்டுமா? இப்படியும் செய்யலாம்... ஆய்வில் வெளிவந்த தகவல்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நீண்ட காலம் வாழவும், ஆரோக்கியமாக இருக்கவும் ஒரு புதிய ரகசியத்தை கண்டறிந்துள்ளனர்.

இதில் இளம் வயதினரின் ரத்தத்தை உங்களுக்குள் செலுத்தி கொள்ளுவதால் நீண்ட காலம் வாழலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இளம் வயதினரின் ரத்தம் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய டிமென்ஷயா, புற்றுநோய் மற்றும் இதய நோயை தடுக்கும் என லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விலங்குகளை கொண்டு செய்த முதற்கட்ட சோதனை வெற்றி என நேச்சர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதில் இளம் வயது எலிகளின் ரத்தத்தை வயதான எலுகளின் உடம்பில் செலுத்தியவுடன் வயதான எலிகளுக்கு வயது முதிர்ச்சி நோய்கள் வரவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியத்தை கணிக்கும் மூலக்கூறுகளை கண்டறிய ரத்தத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பிரிட்டன் விஞ்ஞானிகள் விலங்குகள் மீது மேலும் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ள என கூறுகின்றனர்.

இந்நிலையில் சான் ஃபிரான்ஸிஸ்கோ நிறுவனம் ஒன்று மனிதர்களை வைத்து ஆய்வு செய்து வருகிறது.

ஆம்ப்ரோசியா என்னும் நிறுவனம் 8000 டாலர்களுக்கு இளம் வயதினரின் பிளாஸ்மா செல்களை வழங்குகிறது .

அதில் நோயாளிகள் உடலில் கொழுப்பு குறைதல் போன்ற முன்னோற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து எலிகளை கொண்டு செய்யும் இந்த சோதனை 150 வருட பழமையான முறையிலிருந்து எடுக்கப்பட்டது.

இரு எலிகளின் ரத்த ஓட்டத்தை மருத்துவ ரீதியில் ஒன்று சேர்த்தால் உறுப்புகள், தசைகள் மற்றும் செல்கள் புதுப்பிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இளம் வயது நபர்களிடமிருந்து ரத்தம் வாங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ரத்த தானம் செய்வதாக நினைத்துக் கொண்டால் சிக்கல் தான் என கூறுகின்றனர்.

மேலும் மருத்துவ ரீதியாக இந்த சிகிச்சை பலன் தருமா என்பற்கு ஆதாரங்கள் இல்லையென விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்