கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைய வேண்டுமா? வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பாரம்பரியமாகவே இயற்கை முறையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பாகற்காயை பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு பாகற்காயின் தனிச்சிறப்பே உண்டு.

அதுமட்டுமின்றி நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது மற்றும் கொழுப்பும் சர்க்கரையும் பாகற்காயில் தயாரிக்கப்படும் டீ பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் டீயை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • பாகற்காய்
  • நீல கற்றாழை சாறு அல்லது தேன்
  • நீர்
  • காய வைத்த பாகல் இலை
செய்முறை

முதலில் பாகற்காயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி அதை நன்கு உலர வைத்து அல்லது பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரம் ஒன்றில் நீரை கொதிக்க வைக்கவும். உலர்ந்த பாகற்காய் சீவல்களை நீரினுள் போட்டு பத்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும். இளஞ்சூடாகவும் வைக்கலாம்.

இப்படிச் செய்வதால் பாகற்காயிலுள்ள சத்துக்கள் நீரினுள் இறங்கும். அடுப்பை விட்டு பாத்திரத்தை இறக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும்.

பிறகு வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் அல்லது கப்களில் எடுத்துக்கொள்ளவும்.

தேன் அல்லது அதுபோன்ற இயற்கை இனிப்பூட்டியை இனிப்புக்காகவும் நறுமணத்துக்காகவும் சேர்க்கவும்.

பெரும்பாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவே பாகற்காய் டீ பருகுவதால், இனிப்புக்காக எதையும் சேர்க்காமல் இருப்பது கூடுதல் நன்மை தரும்.

குறிப்பு - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த டீ எதிர்மறை விளைவுகளை தரக்கூடும்.

வேறு நன்மைகள்
  • பாகற்காய் அழற்சியை தடுக்கும் இயல்பு கொண்டது. ஆகவே, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் பாகற்காய் டீ அருந்தலாம்.
  • கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை அகற்றக்கூடிய குணம் பாகற்காய் டீக்கு உள்ளது. அஜீரண பிரச்சினையை அகற்றி, குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்.
  • பாகற்காயில் உள்ள வைட்டமின் 'சி' நோய் தொற்றுக்கு எதிராக போரிடக்கூடியது. பாகற்காய் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • பாகற்காய் டீ, கண்களின் பார்க்கும் திறனை உயர்த்தக்கூடியது. பாகற்காயில் உள்ள வைட்டமின் 'ஏ', பீட்டா கரோட்டினாக உடலில் மாற்றம் பெறும். பீட்டா கரோட்டின் கண் பார்வையை அத்தியாவசியமானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers