பசியின்மையை எளிதில் போக்க வேண்டுமா? இந்த உணவுகள் மட்டுமே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெரும்பாலானோருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை பசியின்மை (Anorexia) ஆகும்.

இது குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால், இளைஞர்களுக்கு மன அழுத்தம் அல்லது மனத்தளர்ச்சி இருந்தால், பெரியவர்களுக்கு, மஞ்சள் காமாலை, அல்சர், புற்றுநோய் போன்ற நோய்களால் பசியின்மை ஏற்படுகின்றது.

இதற்கு பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்தவைகயில் இதனை சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை பின்பற்றினாலே போதும். தற்போது அதனை பார்ப்போம்.

  • பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தும், கோலெயைஸ்டோக்கினின் (cholecystokinin) எனும் மூலப்பொருளும் பசியின்மையை போக்குகிறது.
  • கிரீன் டீயில் இருக்கும் கேட்டச்சின்கள் எனப்படும் கூட்டுப்பொருள் பசியின்மையை சரி செய்கிறது.
  • ஆப்பிளை விட அதிகமான உயர்ரக நார்ச்சத்து பேரிக்காவில் நிறைந்துள்ளது. மூன்று ஆப்பிள் சாப்பிடுவது ஒரு பேரிக்காய் சாப்பிடுவதும் சமம் ஆகும். இது பசியின்மையை போக்குவதில் சிறந்த உணவாக இருக்கிறது.
  • பசியின்மையை போக்குவதில் காபி ஒரு சிறந்த பானம்.
  • பாதாமில் இருக்கும் நார்ச்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பின் நலனும் பசியின்மையை போக்க உதவும்.
  • ஆலிவ் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்பு சத்துகள் கிடைக்கின்றன. இது பசியை தூண்ட உதவும்.
  • இரைப்பையில் பசியை தூண்டுவதற்கான சுரப்பியை அதிகப்படுத்த இலவங்கப் பட்டை உதவுகிறது.
  • பசியின்மையை சரி செய்வதற்கான மற்றுமொரு சிறந்த உணவு மிளகாய். ஆனால், மிளகாயை அதிகப்படியாய் உபயோகப்படுத்தினால் அல்சர் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers