உணவை வேக வேகமாக சாப்பிட்டால் என்ன ஆபத்துகள் ஏற்படுத்தும் தெரியுமா ?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய அவசர உலகில் எல்லோரும் உணவை மென்று சாப்பிவதை விட்டுவிட்டு அவசர அவசரமாக சாப்பிடுவதே வழக்கமாக கொண்டு உள்ளார்.

இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். ஏனெனில் வேகமாக சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் உணவை அவசர அவசரமாக சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்ன என்பதை பார்ப்போம்.

  • வேகமாக சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.
  • விரைவாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்த உதவும் குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும்.
  • வேகமாக சாப்பிடும் இளம் வயது ஆண் மற்றும் பெண்களிடம் இன்சுலின் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் உடலில் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.
  • இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சிதை மாற்ற நோயுடன் தொடர்புடையதாகும். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய் போன்ற பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
  • வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers