நீங்கள் விரும்பும் அளவிற்கு எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த வழிமுறையை தேர்வு செய்யுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடையினை குறைக்க எத்தனையோ டயட்கள் வந்த வண்ணமே உள்ளது.

அதில் ஒன்று தான் யோகட் டயட். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகின்றது.

இது மற்ற டயட்டுகளை போல எளிதானதாக இருக்காது. யோகர்ட் டயட் மிகவும் சிறிய அளவை கொண்டதாகும்.

ஒரு கப் யோகர்ட்டில் 100 கலோரிகளும், 6 கிராம் கார்போஹைட்ரேட்டும், 17 கிராம் புரோட்டினும் உள்ளது.

யோகர்ட் டயட்டில் தினமும் 500 கிராம் யோகர்ட் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் வேறுசில ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகும்.

தற்போது இந்த யோகர்ட் டயட்டை எப்படி கடைபிடிப்பர் என்பதை பார்ப்போம்.

முதல் நாள்

டயட்டின் முதல் நாள் 6 கப் யோகார்ட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் 4 ஸ்பூன் சிக்கனையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் நாள்

டயட்டின் இரண்டாவது நாள் 6 கப் யோகார்ட்டை எடுத்து கொள்ளுங்கள். மேலும் 4 சுட்ட உருளைக்கிழங்கையும் எடுத்து கொள்ள வேண்டும.

மூன்றாம் நாள்

டயட்டின் மூன்றாவது நாள் 6 கப் யோகர்ட்டை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஆப்பிள், 1 கிவிப்பழம் மற்றும் 4 ஸ்பூன் சிக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான்காம் நாள்

டயட்டின் நான்காவது நாள் 6 கப் யோகர்ட், 4 ஸ்பூன் சால்மன் மீன் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் 1 மாம்பழத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள்

டயட்டின் ஐந்தாவது நாளில் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்கள். குறிப்பாக வாழைப்பழத்தை இதில் சேர்த்துக்கொள்ள கூடாது. இதனுடன் 6 கப் யோகர்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆறாவது நாள்

ஆறாவது நாள் டயட்டில் வெறும் யோகார்ட்டை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே கப் யோகார்ட்டை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

ஏழாவது நாள்

டயட்டின் இறுதி நாளில் வெறும் யோகார்ட்டும், தண்ணீரும் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். 6 கப் யோகார்ட்டும், 8 முதல் 10 கப் தண்ணீரும் எடுத்து கொள்ளுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்