சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவுகளை எல்லாம் தவிர்ப்பது நல்லது

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் நோய்களுள் சக்கரை நோய்களும் ஒன்றாக கருதப்படுகின்றது.

உலகமெங்கும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது.

சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உணவுமுறையும் முக்கியமாக அவசியமாகும்.

சிலர் கட்டுப்பாடுன்றி உணவை உட்கொள்ளுவதனாலும் சக்கரை நோய் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இதிலிருந்து எளிதில் விடுபட சில உணவுகளை தவிர்த்தாலே போதும். தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் பழங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உலர் பழங்களை எடுத்துக்கொள்ளும்போது அது சர்க்கரை மற்றும் க்லேசம்யக் அளவை உடனடியாக உயர்த்தும்.

  • சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிகளவு தர்பூசணி சாப்பிடுவது அவர்கள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும்.

  • உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி, காப்பர், மாங்கனீசு போன்றவை அதிகம் உள்ளது. ஆனால் இதில் அதிகமாக இருக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் க்ளெசமிக் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.

  • சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக சர்க்கரை இருக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது.

  • சப்போட்டா சர்க்கரை நோயாளிகள் தொடவே கூடாது. மற்ற பழங்களை காட்டிலும் இது சர்க்கரையின் அளவை மிக அதிக அளவில் அதிகரிக்கக்கூடும்.

  • சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நீக்கப்படாத பாலை குடிக்கக்கூடாது. ஏனெனில் இதில் அதிக நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும். நிறைவுற்ற கொழுப்புகள் இன்சுலின் அளவு மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

  • பழத்தை ஜூஸ் போடுவது அதிலிருக்கும் நார்ச்சத்துக்களை இழக்க செய்யும். குறிப்பாக ப்ரெக்டொஸ் அதிகமிருக்கும் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers