மாதவிடாய் காலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தம் வருகிறதா ? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

சாதாரணமாக மாதவிடாய் காலமானது 2-7 நாட்கள் வரை இருக்கும். சராசரியாக 5 நாட்கள் வரை இருக்கும்.

இதில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களாக இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு 21 நாட்களாகவும், வேறு சில பெண்களுக்கு 35 நாட்களாகவும் இருக்கும்.

இதன்போது இரத்தம் சிவப்பு, அடர் சிவப்பு, பிரவுன் கலர்களில் வரும். ஆனால் சிலருக்கு கருப்பு நிறத்தில் கூட மாதவிடாய் காலங்களில் வரும்.

இதற்கு காரணம் சிலருக்கு கருப்பை பலவீனமாகவோ அல்லது கருப்பை சுவர் மெல்லியதாகவோ இருந்தால், இரத்தத்தை முறையாக வெளியேற்ற முடியாமல், தாமதமாக வெளிவரும் போது, இரத்தம் அடர் அல்லது கருப்பு நிறத்தில் கெட்டியாக வெளிவரும்.

இதற்காக மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வை இங்கு பார்ப்போர்.

  • கருஞ்சீரகத்தை கருப்பட்டி சேர்த்து அரைத்து, மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வந்தால், கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம். அதுவும் 3 மாதம் இப்படி உட்கொண்டு வந்தால், கருப்பையின் வலிமை அதிகரித்து, மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.
  • வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும் மூன்று வேளை குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் மாதவிடாய் காலத்தில் கெட்டியாக இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.
  • மாதவிடாய் காலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தக்கசிவை சந்திக்கும் பெண்கள், தினமும் திராட்சை ஜூஸ் குடித்து வர, 3-4 மாதங்களில் இந்த பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
  • ஒரு கப் பாலில் 2-3 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் இரவில் குடித்து வந்தால், கருப்பைச் சுவர் வலிமையாகி, கருப்பையில் உள்ள எஞ்சிய இரத்தம் வெளியேறிவிடும்.
  • ஒரு கப் மாட்டுப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, குடித்து வர கருப்பு நிறத்தில் இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.
  • சோம்பு நீரை தினமும் 3 வேளை குடித்து வர வேண்டும். இதனால் கருப்பையின் சுவர் வலிமையடைந்து, மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  • இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர மாதவிடாய் கால பிரச்சனைகள் நீங்கும். அதிலும் இஞ்சி சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் கால பிரச்சனைகள் அகலும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers