பல்வலியை எளிதில் போக்க வேண்டுமா? இந்த மூலிகை டூத் பேஸ்ட்டை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பல் வலி அடிக்கடி வருவதற்கு நாம் உபயோகப்படுத்தும் பற்பசையும் ஒரு காரணமாக அமைகின்றது.

தற்போது வெளிவரும் பெரும்பாலான பற்பசையில் கெமிக்கல் கலந்துள்ளதால் பின்விளைவுகளே அதிகம் சந்திக்கின்றோம்.

அதனால் ஏற்படும் கெமிக்கல் அதிகம் கலந்து பற்பசைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமது உடலின் ஆரோக்கியம் கெடுகிறது.

இதற்கு நாம் வீட்டிலே இயற்கை முறையில் மூலிகை கலந்த பற்பசையினை தயாரிக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா - 3 கரண்டிகள்
  • வேப்ப இலை பவுடர் - 1 கரண்டி
  • தேங்காய் எண்ணெய - 3 கரண்டிகள்
  • ஜைலிட்டால் - 1 கரண்டி (சுவைக்காக)
  • மிண்ட் ஆயில் - 15 துளிகள் (வாசனைக்காக)
தயாரிக்கும் முறை

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படி ஒவ்வொன்றாக கலந்தால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான பற்பசை. அதன்பின்னர் அதை ஒரு கண்ணாடி ஜாடியில் பத்திரப்படுத்தி வைக்கவும்.

இந்த பற்பசையை நார்மல் பற்பசையை போல நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்து பல் துலக்கவும்.

பற்கள், ஈறுகள் வலிமை பெறுவதுடன் பல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் அருகில் வராது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்