குடலில் உள்ள ஒட்டுண்ணிகளால் அவதியா? இதிலிருந்து விடுபடுவது எப்படி ?

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஜியர்டயாஸிஸ் என்பது ஒரு குடல் தொற்றாகும். இது ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒட்டுண்ணி புரோட்டோசோனால் ஏற்படுவதாகும்.

இந்த ஒட்டுண்ணி சிறு குடலைத் தாக்குவதோடு, கடுமையாக பாதிக்கவும் செய்யும்.

மேலும் இது குடலினுள் கட்டிகளாக உருவாகி, உணவுகள் மற்றும் குடிநீரின் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடியது.

இந்த ஒட்டுண்ணி உடலினுள் இருந்தால், அதனால் நாள்பட்ட வயிற்றுப் போக்கு அல்லது தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் திடீர் எடை குறைவு சந்திக்க நேரிடும்.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட சில இயற்கை வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.

  • ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிடுங்கள். இதனால் எப்பேற்பட்ட ஒட்டுண்ணியும் அழிந்து வெளியேறிவிடும்.
  • ஒட்டுண்ணி பிரச்சனைக்கான அறிகுறிகள் தென்பட்டால், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
  • பீட்ரூட் ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், ஜியர்டயாஸிஸ் தொற்றில் இருந்து விலகி இருக்கலாம்.
  • ஒட்டுண்ணி இருப்பவர்கள் தேங்காய் அடிக்கடி சாப்பிடுங்கள். தேங்காயில் லாரிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது வைரஸ் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்