வயிறு உப்புசம் பிரச்சினையை எளிதாக சமாளிக்க வேண்டுமா? அப்போ இந்த பானத்தை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

வயிறு உப்புதல் என்பது வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு அடிக்கடி நிகழும் பிரச்சனை ஆகும்.

இது ஜங்க் உணவுகள் அல்லது ஒரே நேரத்தில் வயிறு நிறைய உணவுகளை சாப்பிடுவதால் செரிமானம் அடையாமல், இந்த வயிற்று உப்பிசம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த சமயத்தில் உங்கள் வயிறு ரொம்ப இறுக்கமாக கனத்துடன் வயிறு வலி மற்றும் அமிலத்தன்மை போன்றவை ஏற்படும். வயிறு வீக்கத்தால் அவதிப்படுபவர்கள்.

இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பானத்தினை அருந்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
  • வெள்ளரிக்காய் ஜூஸ் - 1/2 டம்ளர்
செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தேவையான அளவு ஒரு டம்ளரில் எடுத்து கொள்ள வேண்டும். அதை நன்றாக கலக்க வேண்டும்

இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடித்தால் வயிறு வீக்கம் சரியாகி விடும். இஞ்சி தேவைப்பட்டால் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

இந்த இயற்கை ஜூஸ் ஒரே ஒரு நாளில் உங்கள் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இதை தினமும் எடுத்து வந்தால் வயிறு வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.

பயன்கள்
  • இதனுடன் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதும் முக்கியம். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுப்பதன் மூலமும் கொழுப்பு மற்றும் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் வாயு தொல்லை குறைந்து வயிறு வீக்கத்தை தடுக்கலாம்.
  • மேலும் உடற்பயிற்சி செய்தால் வயிற்றில் உள்ள அதிகமான வாயுக்கள் வெளியேறி வயிறு வீக்கத்தை குறைத்திடும்.
  • கீரைகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்ந்த இந்த ஜூஸில் நிறைய நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
  • இது வயிற்றில் உருவாகும் வாயுக்கள் மற்றும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி வயிறு வீக்கத்தை காணாமல் செய்கிறது. மேலும் இது உங்கள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்