உடல் எடையை குறைப்பதற்காக நாம் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?

Report Print Santhan in ஆரோக்கியம்

உடல் எடையை குறைத்து தொப்பையை இல்லாமல் செய்வது இன்று அலுவலகத்தில் அமர்ந்து பணி புரியும் பலரது கனவு என்றே சொல்லாம்.

குறிப்பாக இளைஞர்கள் அதீத உடல் எடை காரணமாக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதற்காக ஜிம், டயட் என பல வழிகளை கையாண்டாலும் அவற்றை சரியாக செய்கிறோமோ என்பது கேள்வியே.

உடல் எடை குறைக்க முயலும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும், அவற்றை எப்படி சரியாக செய்யவேண்டும் எனவும் பார்ப்போம்.

அளவுக்கு அதிகமான சத்தான உணவுகள் சாப்பிடுவது

சத்தான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் தொப்பை குறையாது. உதாரணமாக பேலியோ டயட் கடைபிடிப்போர் நட்ஸ், முழுதானியங்கள் சாப்பிட வேண்டும். ஆனால் இதையே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

அதீத உடற்பயிற்சி செய்வது

ஜிம் பயிற்சி அவசியம்தான். ஆனால் இதனை அதிகமாக செய்யும்போது அதிகமாக பசி எடுக்கும். இதனால் அதிகமாக சாப்பிட்டால் தொப்பை குறையாது.

மிகக் குறைவான கலோரிகளை சாப்பிடுவது

இது மிகவும் ஆபத்தானது. உடல் இயக்கத்துக்கு கலோரிகள் மிக அவசியம். உடல் எடையை குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பது தவறு. அவ்வப்போது சிறிய நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டு நாள் முழுக்க வயிற்றை நிரப்புவது கூடாது. இவ்வாறு செய்வது உடல் எடையை அதிகரிக்கும்.

அலுவகத்தில் வேலை பார்த்துக்கொண்டே சாப்பிடுவது

இதனை பலர் செய்திருப்பார்கள். வேலை மும்மரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறோம் எனத் தெரியாமல் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். சாப்பாடு நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். வேலை நேரத்தில் கொறிக்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers