நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கிங்கணு கவலையா? இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும்.

இருப்பினும் சிலர் என்னத்தான் சாப்பிட்டாலும் உடம்பு போடுதே இல்லை என்ற கவலை காணப்படும்.

என்னத்தான் உடல் அதிகரிப்பு மாத்திரிகைகள் இருந்தாலும் இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை ஊற வைத்து சாப்பிடுவதால் இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்.
  • ஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும்.
  • வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும்
  • தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்.
  • தினமும் ஊற வைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டு வர வேண்டும். 10- முதல் 15 வரை கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்.
  • எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது உட்ல எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வைல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • வாழைப் பழத்தை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்து தினமும் குடியுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் பண்பு வாழைப்பழத்தில் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழ மில்க் ஷேக் நல்ல வாளிப்பை தரும்.
  • பீனட் பட்டரை பிரட்டில் தடவி சாப்பிட்ட வேண்டும். தினமும் இப்படி இரண்டு ஸ்லைஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
  • பாதாம் பாலில் அதிக புரதம் இருப்பதால் போஷாக்கை உடலுக்கு அளிக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டச் செய்யும். தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
  • பாஸ்தா செய்வதற்கு எளிதானது. அதனுடன் காய்கறிகளும் சேர்த்து சமைக்கும்போது அனைத்து ஊட்டச் சத்தும் நமக்கு அளிக்கிறது. ஆகவே வாரம் 2 நாட்கள் பாஸ்தா சாப்பிடுங்கள்.
  • தயிர் அல்லது யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள். லஸ்ஸியாக சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு. உடல் எடை கணிசமாக கூடும். தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
  • சமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் காண்பீர்கள்.
  • காலை முதல் இரவு வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். அப்படி தொடர்ந்து குடிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers