அஜீரணக் கோளாறுகளிலிருந்து எளிதில் விடுபடனுமா? இந்த அற்புத டீயை மட்டும் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால் அல்லது நோய்களால் இந்தச் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதையே அஜீரணம் என்கிறோம்.

தொடர்ந்து பல வித உடல் பிரச்சினைகள் வருவதோடு கடுமையான தாங்க முடியாத வலி, அசெளகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

இதனால் நம்மை எந்த வேலையும் செய்யவிடாமல் முடக்கி விடுகின்றது.

இதனை இதை உடனே ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, அஜீரணம் போன்றவற்றை கண்டு கொள்ளலாமல் விட்டால் தீவிர உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது.

இதிலிருந்து விடுபட இயற்கை முறை மிகவும் சிறந்தது. இதனை சரி செய்யும் அற்புத டீ ஒன்றினை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • அரிசி - 1 கப்
  • தண்ணீர் - 3 கப்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அரிசியை கொடுத்துள்ள அளவு தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு எப்பொழுது கொதிக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது அந்த அரிசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.

உங்கள் இரவு சாப்பாட்டுக்கு பின்னர் இதை தினமும் பருக வேண்டும். இதனால் உங்கள் அஜீரணக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

ஏனெனில் இந்த டீ யில் அதிகமான ஊட்டச்சத்துக்களான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை உள்ளன.

இந்த சத்துக்கள் உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி அஜீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இந்த டீ உங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை சரி செய்கிறது.

இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...