இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும்... கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது.

இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது.

மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண்கள் நோய்கள் அத்தனையையும் விரட்டுகின்றது.

இந்த கீரையை இதை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். தற்போது இந்த கீரையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.

  • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் மூடு இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

  • மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது.

  • கோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

  • மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

  • மூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. குறிப்பாக, இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

  • இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் காப்பாற்றும். ஏனென்றால் இது இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.

  • மூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று போடுங்கள். ஒரே வாரத்தில் மூட்டுவலி எப்படி பறந்து போய்விடும்.

  • வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்