பல், ஈறுகளில் ஏற்படும் பிரச்சினையிலிருந்து விடுபடணுமா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

பல்களில் உண்டாகும் சீழ்கட்டி வந்துவிட்டால் அதிக வலியும், வேதனை மட்டுமல்லாமல் சாப்பிடக்கூட முடியாதளவுக்கு ஒருவரை இது பாதிக்கிறது.

பற்களில் உண்டாகும் சீழ்கட்டிகளை உடனடியாக சிகிச்சை பெற்று சரி செய்துக் கொள்ள வேண்டும், இல்லையேல், பல பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பு உண்டு.

தற்போது பல், ஈறுகளில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்தை பயன்படுத்தினாலே போதும். தற்போது அந்த அற்புத மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்
  • ஆலமரப்பட்டை (காய்ந்தது)= 100 கிராம்
  • மருதம் பட்டை= 100 கிராம்
  • சாம்பிராணி= 10 கிராம்
  • படிகாரம்= 10 கிராம்
  • கற்பூரம்= 5 கிராம்
செய்முறை

முதலில் அனைத்துப் பொருட்களையும் நன்றாக இடித்து, பொடியாக்கி கொள்ளவும்.

இதை ஒரு சிட்டிகை எடுத்து, ஈறுகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

ஈறு கரைதல், சீழ் வடிதல், ரத்தம் வருதல், ஈறுகளில் தோன்றும் கட்டி, புண் ஆகியவை குணமாகும். பற்களும் வலுவாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...