வெறும் வயிற்றில் தினமும் காலை இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.. சிறுநீரக கற்களை வேகமாக கரைக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பெரும்பாலும் பெரியோர்கள் சிறுநீரக கற்களினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சிறுநீரக கற்களை கரைக்க எவ்வளவே மருந்துகள் இருந்தாலும் இயற்கை முறையில் கரைப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தற்போது இங்கு சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை மருந்து ஒன்று உள்ளது.

இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது. இதனை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • சர்க்கரை - 250 கிராம்
  • ஆலிவ் எண்ணெய் - கால் லிட்டர்
  • எலுமிச்சை தோல் - 250 கிராம்
  • பார்ஸ்லே வேர் (துண்டு துண்டாக வெட்டப்பட்ட) - 250 கிராம்
  • தேன் - 250 கிராம்
செய்முறை

முதலில் நன்கு கழுவிய எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின் பார்ஸ்லே வேர்களை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எலுமிச்சையை அரைத்து போலவே, இதையும் நன்கு அரைக்கவும்

அதன் பிறகு, அரைத்த எலுமிச்சை மற்றும் பார்ஸ்லேவுடன் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். இந்த அனைத்து பொருட்களும் சமப்பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.

இந்த கலவையை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும், உறங்குவதற்கு முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவும் உட்கொள்ளுங்கள்.

இறுதியாக இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஏனெனில், இது அழுகிப் போக கூடிய தன்மை கொண்டது.

இதை முடிந்தால் 4-5 நாட்களுக்கு ஒருமுறை செய்து உட்கொள்வது நல்லது.

இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers