ஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா? இதோ அற்புத வழிகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று உடல் எடையினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்கு இன்றைய நவீன உலகில் பல்வேறு மாத்திரை மருந்துகளை ஊசிகள் போன்றவை உள்ளன. இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமே தவிர உடல் எடையினை நிரந்தரமாக குறைக்க முடியாது.

இதற்கு நாம் வீட்டிலே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சில பொருட்களை உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவு புரிகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
  • மாலையில் 3-4 மணியளவில் ஒரு பௌலி பப்பாளியை சாப்பிட வேண்டும். அதிலும் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, மிளகுத் தூள் மற்றும் உப்பு சிறிது தூவி உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
  • 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, தொப்பையை தினமும் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.
  • 1 கப் முளைக்கட்டிய கொள்ளு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1/2 டீஸ்பூன் புதினா, சாட் மசாலா 1/2 டீஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசிக்கும் நேரத்தில் உட்கொண்டு வர, பசியும் அடங்கும், கொழுப்புக்கள் கரைந்து தொப்பையும் குறையும்.
  • 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.
  • தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்ப காலையில் எழுந்ததும் செய்து வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.
  • ஆப்பிளை நறுக்கி துண்டுகளாக்கி, அத்துடன் பட்டைத் தூளை தூவி தினமும் பசிக்கும் போது உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும்.
  • 2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்