பற்கால்வாய் சிகிச்சைக்குப் பின் தீவிர வலியால் அவதியா? இதோ எளிய வீட்டு வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பற்கால்வாய் சிகிச்சை என்பது சிதைந்த அல்லது பாதிக்கப்பட்ட பல்லின் உள்ளே சுத்தம் செய்து, வடிவமைத்து, மந்தமான பொருள் உள்ளே வைத்து மூடும் செயல்முறை ஆகும்.

அது பல் பாதிக்கப் பட்டு மோசமான நிலையில் இருந்து, மற்றபடி அந்த பாதிக்கப்பட்ட பல்லை காப்பாற்ற முடியாது என்றால் பற்கால்வாய் சிகிச்சை அவசியம். இதை செய்யாமல் இருந்தால் அந்த பல்லை பிடுங்க வேண்டி இருக்கும். இதன் போது பற்கால்வாய் சிகிச்சை செய்யப்படுகின்றது.

பற்கால்வாய் சிகிச்சைக்கு பின் பல் வலி அதிகமாகவே காணப்படும். இதற்கு கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஸ் பேக்கை வைத்திடவும். அப்படிச் செய்வதால் அந்த பகுதி உணர்ச்சியில்லாமல் போகும். அதனால் வலியும் குறையும்.
  • பல் வலி ஏற்படும் போது நீர்ம உணவுகளான ஆரஞ்சு ஜூஸ், கேரட் ஜூஸ் போன்ற ஜூஸ்கள் குடிப்பது நல்லது.
  • 1 டீஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, வாயை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறையாவது கொப்பளிக்கவும். முடிந்தால், தண்ணீரை பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது நேரம் தக்க வைத்துக் கொண்டு, பின் துப்பி விடவும்.
  • விஸ்கி அல்லது பீர் போன்ற மதுபான வகைகளை கொண்டும் கூட வாயை கொப்பளிக்கலாம். இது தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாவை நீக்குவதோடு மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட இடத்தில் உணர்ச்சியை நீக்கும். இதனால் வலியில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
  • டீ ட்ரீ எண்ணெய்ற்கால்வாயினால் ஏற்பட்டுள்ள வலியை போக்கவும் உதவும். சில துளி எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அதனை வாயில் சற்று நேரம் வைத்திருக்கவும். இது வலியை குறைக்கும்.
  • நற்பதமான வெள்ளரிக்காயை ஒரு துண்டு எடுத்து, பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைக்கவும். வெள்ளரிக்காயின் குளிர்விக்கும் தன்மை வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
  • ஒரு பஞ்சுருண்டையின் மீது சற்று ஆலிவ் எண்ணெய் தடவி அதனை வலி எடுக்கும் பல்லின் மீது மெதுவாக தடவவும். நீங்கள் எதிர்கொள்ளும் வலி இதனால் மெதுவாக மறையத் தொடங்கும்.
  • கிராம்பில் அழற்சி எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் மயக்க குணங்கள் நிறைந்துள்ளது. வலி நிவாரணிக்கு பாதிக்கப்பட்ட பல்லின் மீது கிராம்பு எண்ணெய்யை தடவவும்.
  • வெங்காயம் அல்லது பூண்டை மெல்லுவது பற்கால்வாய் வலிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கிறது.
  • சிறிது பெருங்காயத்தை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸுடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சற்று சுட வைத்து கொள்ளுங்கள். பின் பஞ்சுருண்டையை அதில் முக்கி அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, வலியை குறைக்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்