ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

இதில் இருந்து எளிதில் விடுபட கருப்பு ஏலக்காய் மிகவும் உதவு புரிகின்றது. அதிலும் இதில் கசாயம் செய்து குடிப்பதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதோடு ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது.

தற்போது இந்த அற்புத கசாயத்தை எப்படி தயாரிப்பது என்று பார்பபோம்.

தேவையான பொருட்கள்
  • கிராம்பு - 2
  • கருப்பு ஏலக்காய் - 4-5
  • இஞ்சி (துருவியது) - 1 டீ ஸ்பூன்
  • துளிசி இலைகள் - 5-6
  • தண்ணீர் - 3-4 கப்
செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு துளிசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.

தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.

இது ஆஸ்துமாவின் தீவரத்தை குறைக்க பயன்படுகிறது. முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers