உடல் எடையை சட்டென குறைக்கும் வினிகர்.... இப்படி ட்ரை பண்ணி பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடையினை குறைக்க நினைப்போருக்கு வினிகர் சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.

இதை உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வந்தாலே முழு உடலுக்கு நன்மை கிடைக்கும்.

தற்போது வினிகரை வைத்து உடல் எடையை சட்டென குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை
  • வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
  • 1/4 கப் சர்க்கரை
  • தேங்காய் நீர் 1 லிட்டர்
தயாரிப்பு முறை

முதலில் தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும்.

நன்றாக கலக்கி சர்க்கரை கரைந்த பின்னர் அதை இறக்கி ஆற விடவும்.

குளிர்ந்த பிறகு இதனை கண்ணாடி ஜாரில் மாற்றி கொள்ளவும்.அடுத்து இதனை 1 வாரத்திற்கு சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும்.

அதன் பின் இதனுடன் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை 4 முதல் 12 வாரங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பின்னர் பயன்படுத்தலாம். சமைக்கும் உணவில் இதை தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம்.

தேங்காய் வினிகரை உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.

மேலும், அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இது தடுத்து விடும். கூடவே எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்