மூட்டு வலியைக் குறைக்கும் முட்டைக்கோஸ் இலை... எப்படினு தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக காரணமாக கருதப்படுகின்றது.

மூட்டுவலி வந்தால்பலரும் பலவகையில் மருந்துகள் தைலங்கள் என்பவற்றை உபயோகிக்கின்றது.

இதற்கு நமது முன்னோர்கள் மூட்டு வலியைக் குறைக்க முட்டைக்கோஸை வலியுள்ள இடத்தைச் சுற்றி கட்டினால், வலி விரைவில் குறையும் என்று கூறுகின்றார்கள்.

ஏனெனில் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின்கள், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள், ஆந்தோசையனின்கள், க்ளூட்டமைன் போன்றவை உள்ளது.

தற்போது அவர்கள் கையாண்டு வந்த முட்டைகோஸ் வைத்தியம் பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • முட்டைக்கோஸ்
  • அலுமினிய தகடு
  • பூரிக்கட்டை/ஒயின் பாட்டில்
  • பேண்டேஜ்
செய்முறை

முதலில் முட்டைக்கோஸின் இலைகளைத் தனியாகப் பிரித்து, நீரில் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் பூரிக்கட்டை/ஒயின் பாட்டில் கொண்டு சாறு வெளியேறும் அளவில் தேய்க்க வேண்டும்.

பின்பு அலுமினிய தகட்டில் முட்டைக்கோஸை விரித்து, ஓவனில் சில நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் வலியுள்ள இடத்தில் வைத்து, பேண்டேஜ் பயன்படுத்தி கட்ட வேண்டும்.

பிறகு 1 மணிநேரம் கழித்து கழற்ற வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை புதிய முட்டைக்கோஸ் இலைக் கொண்டு செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பச்சை முட்டைக்கோஸை விட, சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் வளமான அளவில் உள்ளது. எனவே இந்த வகை முட்டைக்கோஸ் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers