தினமும் ஒரு டம்ளர் இந்த பானத்தை குடிங்க... மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக 40 வயதை தாண்டினாலே உடலில் பலம் குறைந்து மூட்டு வலி, முதுகுவலி, மூட்டு தசை நார்கள் கிழிவடைதல் என்று பல பிரச்சினைகள் வர ஆரம்பித்துவிடுகின்றது.

குறிப்பாக கடின வேலைகள் செய்பவர்கள் அதிகம் பாதிக்கும் நோய்கள் இது முக்கிய இடம் பெறுகின்றது.

வேலைகளை செய்தால் தசைநார்கள் கிழியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் ஒருவருக்கு தசைநார்கள் கிழிந்தால், அதனால் நடக்கவோ, ஓடவோ, பளுவான பொருட்களைத் தூக்கவோ முடியாது. கடுமையான வலியை உணரக்கூடும்.

இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபடவும் தசைநார்களின் வலிமையை மேம்படுத்தும் ஓர் அற்புத பானம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எப்படி தயாரிப்து என்று பார்போம்.

தேவையானவை

  • பட்டை தூள் - 5 கிராம்
  • அன்னாசி பழ சாறு
  • ஓட்ஸ் - 1 கப்
  • பாதாம் - 20 கிராம்
  • ஆரஞ்சு ஜூஸை - 1 கப்
  • தேன் - 20 கிராம்

செய்முறை

முதலில் ஒரு டம்ளரில் நீர் மற்றும் 5 கிராம் பட்டைத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அன்னாசி பழச்சாற்றினை சிறிது எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் 1 கப் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்ளவும். 20 கிராம் பாதாம் மற்றும் 20 கிராம் தேன் எடுத்துக் கொள்ளவும்.

ஓட்ஸை பால் சேர்த்து வேக வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் ஆரஞ்சு ஜூஸ், தேன், பாதாம் மற்றும் பட்டை ஆகியவற்றை பிளண்டரில் போட்டு ஒருமுறை அடித்து, ஓட்ஸ் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு ஓட்ஸ் கலவையை பிளண்டரில் போட்டு, அத்துடன் அன்னாசி பழச்சாற்றினை சேர்த்து நன்கு அரைத்து, பின் பருகவும்

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணரலாம்.

குறிப்பாக இந்த பானத்தைப் பருகும் போது, தசைநார்களுக்கு வலிமையளிக்கும் உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால், இன்னும் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்