உங்களுக்கு ஃபுட் பாய்சனா...? இதில் எதையாவது ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
197Shares

நமது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஃபுட் பாய்சனால் அவதிப்பட்டு இருப்போம்.

சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை சரியாகப் பதப்படுத்தாமல் இருத்தல், உண்ணும் தட்டை நன்றாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படுகின்றது.

குமட்டல், வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

ஃபுட் பாய்சனை வீட்டிலேயே எப்படி சரிசெய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

 • புட் பாய்சனுக்கான அறிகுறிகள் தெரியும் போது, உணவு உட்கொண்ட பின் 1 கப் நீரில் 1 டீஸ்பூன் துருவிய இஞ்சியைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.
 • 1 டீஸ்பூன் தேனில் சிறிது இஞ்சி சாறு சேர்த்து, தினமும் பலமுறை உட்கொள்ளுங்கள்.
 • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் சுடுநீரில் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்கு முன் குடியுங்கள். இல்லாவிட்டால், 2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே உட்கொள்ளுங்கள்.
 • 1 டீஸ்பூன் வேந்தயத்தை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து அப்படியே உட்கொள்ளுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 • டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இவ்விட்டால், எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து நாள் முழுவதும் குடியுங்கள்.
 • துளசி இலைகளை அரைத்து ஜூஸ் எடுத்து, தேன் சேர்த்து தினமும் பல முறை குடித்து வாருங்கள். வேண்டுமானால், இத்துடன் சிறிது கொத்தமல்லி ஜூஸையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 • 4 கப் நீரில் சில துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து கலந்து, அந்நீரை நாள் முழுவதும் மெதுவாக குடித்து வந்தால், அது ஃபுட் பாய்சனால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்கும்.
 • 3 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 3-4 முறை இப்படி சாப்பிட்டால், ஃபுட் பாய்சன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 • ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு, பின் நீரைக் குடியுங்கள். ஒருவேளை உங்களால் பூண்டின் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாவிட்டால், பூண்டினை சாறு எடுத்து குடியுங்கள்.
 • பூண்டு எண்ணெய் மற்றும் சோயாபீன்ஸ் எண்ணெயை ஒன்றாக கலந்து, அந்த எண்ணெய் கலவையை உணவு உட்கொண்ட பின் வயிற்றுப் பகுதியில் தடவுங்கள்.
 • வாழைப்பழம் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதனால் உடலின் ஆற்றலும் தக்க வைக்கப்படும். இல்லாவிட்டால் வாழைப்பழ மில்க் ஷேக்கை குடியுங்கள்.
 • ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் 1 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
 • கொதிக்கும் நீரில் சிறிது சீரகம், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு நாளைக்கு 2-3 முறை குடியுங்கள்.
 • ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட வயிற்று பிரச்சனைகள் நீங்கும். அதோடு வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தைக் கட்டுப்படுத்தும். இவை அஜீரண பிரச்சனைகள் மற்றும் இதர ஃபுட் பாய்சன் அறிகுறிகளைப் போக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்