68 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் இப்படி இருப்பதன் ரகசியம் என்ன?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

நடிகர் ரஜினிகாந்த் 68 வயதிலும் உடல் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் உணவுகளே காரணம்.

ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தினமும் யோகா செய்வதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்.

ஆரம்பத்தில் அசைவப்பிரியரான இவர், பின்னர் காலப்போக்கில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சைவத்திற்கு மாறிவிட்டார், மேலும் சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் கைவிட்டார்.

அவைச உணவுகளில் சிக்கன் மற்றும் மட்டன் உணவுகள் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவார், அதில் சமைத்த உணவுகள் என்றால் அலாதி பிரியம்.

நரம்பு பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பிறகு முற்றிலும் சைவ உணவுகளை சாப்பிட்டு வருகிறார்.

காலையில் சூப் மற்றும் பழங்கள், மதியம் சாப்பாடு மற்றும் இரவு கோதுமை, சாலட் உணவுகளை சாப்பிடுவார்.

இதையும் தாண்டி தினமும் தியானம் செய்வதற்கு ஒரு மணிநேரம் ஒதுக்குவார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்