தொடர்ச்சியாக தும்மல் வருதா? அப்போ இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் என்று சொல்லப்படுகின்றது.

தும்மல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று சுற்றுச்சூழல் அல்லது காலநிலை மாற்றம் ஏற்படும் போது பலர் தும்மல் பிரச்சனையை சந்திப்பார்கள்.

அதுமட்டுமின்றி சிலருக்கு அடிக்கடி தும்மல் வருவதற்கு அடிப்படைக் காரணம் ஒவ்வாமை தான்.

குறிப்பாக இது வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும்.

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை கடைப்பிடித்தாலே போதும் எளிதில் தும்மலிருந்து விடுபடலாம்.

  • ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் நீரை நிரப்பி, துணியால் தலையைமூடி 15-20 நிமிடம் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஆவி பிடியுங்கள். இதனால் தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • சூடான நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, அந்த நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், தொடர்ச்சியாக வரும் தும்மலைத் தடுக்கலாம்.
  • வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4-5 முறை கொப்பளியுங்கள். உப்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள தொற்றுக்களை நீக்கி, தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும்.
  • 1 ஸ்பூன் தேனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால், தும்மல் பிரச்சனை நீங்கும்.
  • எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடிப்பது. இதனால் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, மூக்கில் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிக்க உதவும்.
  • 2-3 பல் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் 2 கப் நீரை நன்கு சூடேற்றி, அதில் பூண்டை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி குளிர வைத்து குடித்தால், தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • சிவப்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் தேன் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் சாப்பிட்டால், தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். அப்படி தினமும் குடித்து வந்தால், சைனஸ் தொற்றுக்களால் ஏற்படும் தும்மலில் இருந்தும் விடுபடலாம்.
  • சுடுநீரில் சிறிது உலர்ந்த சீமைச்சாமந்தி பூக்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து, தினமும் 2-3 முறை குடித்து வர, தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.
  • 2 டீஸ்பூன் சோம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், சீக்கிரம் தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • மூக்கு பகுதிகளில் சிறிது லாவெண்டர் ஆயிலைத் தடவ வேண்டும். இப்படி செய்வதால், தும்மல் தொடர்ச்சியாக வராமல் இருக்கும்.
  • எள் விதைகளை பொன்னிறமாக வறுத்து, அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து, தினமும் 2-3 முறை சாப்பிட வேண்டும். இதனால் தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, விரைவில் சுவாசப் பாதையில் இருக்கும் பிரச்சனைகளும் குணமாகும்.
  • நீரில் சிறிது வெந்தய விதைகளைப் போட்டு 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்தால், தும்மல் விரைவில் சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers