நாடா புழுக்களால் இத்தனை பாதிப்புகளா…? அனைவரும் கவனிக்க வேண்டியது

Report Print Abisha in ஆரோக்கியம்

8 வயது சிறுமி ஒருவர் சரியாக சமைக்காத உணவை சாப்பிட்டதால் தலைக்குள் நாடாபுழுக்கள் உருவாகி உள்ளது அனைவரையும் எச்சரிக்க செய்துள்ளது.

டெல்லியில் பிரபலமான மருத்துவமனையில் 8வயது சிறுமிக்கு கடுமையான தலைவலி என்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு தலையினுள் கட்டி போன்று அதிக அளவில் இருந்ததாக ஸ்கான் மூலம்தெரிய வந்துள்ளது. அதை சோதித்த போது அது நாடாபுழுகளின் முட்டைகள் என்று பார்த்து மருத்துவர்கள்அதிர்ந்து போனார்.

இந்நிலையில் இவற்றை குறைக்க ஸ்டெராய்ட் வகை மருந்துகளை அந்தசிறுமிக்கு வழங்கிய போதும் அது அந்த சிறுமியின் உடல் எடையை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதுபோன்ற சூழல்,சரியாக வேக வைக்காத உணவுகளினாலும், சுத்தமில்லாத கைகளினால் உணவு அருந்துவதாலும்உருவாகின்றது.

இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று நினைக்கலாம். ஆனால் அதுஇரத்தத்தில் கலந்து மூளை, இதயம் போன்ற உறுப்புகளில் சென்றடைந்து பாதிப்புகளைஉருவாக்கும்.

நாடாபுழுகளால்அன்றாட பிரச்சனைகள்

  • வயிற்று வலி
  • வாந்தி மற்றும் பேதி
  • தலைவலி

தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

  • சுத்தமான உணவுகள் உண்பது
  • நன்றாக வேக வைத்த உணவுகள் உண்பது. குறிப்பாக முட்டைகோஸ் கீரை போன்றவை
  • இறைசிகள் நன்றாக வேக வைத்தபின் தான் உண்ண வேண்டும்
  • மலங்களித்தப்பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்
  • பழங்களை நன்றாக கழுவிய பின்பு தான் உண்பது அவசியம்
  • சாப்பிடுவதற்கு முன் கைகள் மற்றும் உண்ணும் பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும்
  • கையில் இருக்கும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

இத்தகைய நடைமுறைகளை பழக்கத்தில் கொண்டால் நாடாபுழுவின் பிரச்சனையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

இதற்கு மேல் இப்பிரச்சனைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்வது மிகவும் அவசியம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்