உயர் ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டுமா? இந்த டீயை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

40 வயதிற்கு மேற்பட்டவர்களை தாக்கும் நோய்களில் ஒன்று தான் உயர் ரத்த அழுத்தம்.

இதிலிருந்து விடபட மாவிலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் பெரிதும் உதவி புரிகின்றது. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற ஏராளமான விட்டமின்கள் அடங்கியுள்ளன.

எனவே உங்கள் விட்டமின் பற்றாக்குறையை போக்கி போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்று வளமுடன் வாழ இந்த தேநீர் பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1 டீ ஸ்பூன் மாவிலைகள் (பச்சை அல்லது உலர வைத்த இலைகள்)
  • சர்க்கரை அல்லது தேன்
  • எலுமிச்சை சாறு

செய்முறை

ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் நீரில் இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

கொதித்ததும் டீயை வடிகட்டிக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரையைச் சேருங்கள். அதில் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பின் குடியுங்கள்.

ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தாலே உங்களுடைய உடலில் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் சீராக இருப்பதை உங்களால் உணர முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்