மூக்கடைப்பு உங்களை வாட்டி வதைக்கின்றதா? இதோ எளிய சிகிச்சை

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெயில் காலம், மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மூக்கடைப்பு.

மூக்கடைப்பானது நாசிக் குழி வீக்கமடைந்து, சளி அதிகம் சேரும் போது, மூக்கில் அடைப்பு ஏற்படும்.

இதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளை விட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

  • புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

  • புதிய ரோஜா மலரை எடுத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

  • குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.

  • மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குறையும்.

  • ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை என சில நாட்கள் பின்பற்றி வர வேண்டும்.

  • சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

  • 1 டம்ளர் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து கலந்து, கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் 2-3 முறை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

  • ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்