இரவில் சுடுநீரில் இதை மட்டும் கலந்து குடிங்க.. ஏராளம் நன்மைகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

இந்த வகையில், இஞ்சி, இலவங்க பட்டை, கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீ குடிப்பதால், உடலில் பல்வேறு மாற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றது.

இஞ்சி, இலவங்க பட்டை, கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டீ குடிப்பதால் வைட்டமின் B,C,E,J மற்றும் K சத்துகள் கிடைக்கின்றது.

மேலும் இது பல்வேறுபட்ட நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தற்போது இந்த டீயினை குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

 • இஞ்சி - சிறிதளவு
 • இலவங்கப் பட்டை - சிறிதளவு
 • கிராம்பு - கால் டீஸ்பூன் அளவு
 • தண்ணீர் - இரண்டு கப்
 • தேன் - கால் டீஸ்பூன்

செய்முறை

முதலில்ல தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

நசுக்கிய இஞ்சி, இலவங்கப் பட்டை பொடி, கிராம்பு மூன்றையும், கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

பிறகு சூடு இதமான அளவிற்கு வந்த பிறகு, வடிக்கட்டி அதில் தேன் சேர்த்து பருகவும்.

குறிப்பு - வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இரவு உறங்குவதற்கு முன்னர் இந்த டீ குடிப்பது சிறந்த நன்மை அளிக்கும்.

நன்மைகள்

 • காய்ச்சல் அறிகுறி தென்படும் போது இந்த தேநீர் குடிப்பது, இலகுவாக உணர உதவும்.

 • கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.
 • சளி தொல்லை நீங்க பயனளிக்கிறது.
 • உடலில் உள்ள நச்சுக்களை அளிக்க செய்கிறது.
 • செரிமானம் சீரடைய பயனளிக்கிறது.
 • இரத்த ஓட்டம் சீராக்க உதவுகிறது.
 • இதயம், கல்லீரல், கணையம் போன்ற பாகங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
 • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...