நாம் சாப்பிட கூடிய ஆரோக்கியமான உணவில் பாதாமிற்கு என்றே ஒரு முக்கிய பங்கு உள்ளது.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் நிறைந்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
இருப்பினும் “அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை நம் பெரியோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.
அந்தவகையில் பாதமின் அளவில் கொஞ்சம் கூடினாலும் நச்சு தன்மையான ஆபத்துகள் நமது உடலுக்கு ஏற்படும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாதாம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட பின் விளைவுகள் வரும் என்பதை தற்போது பார்ப்போம்.
- அதிகமான பாதாமை எடுத்து கொண்டால், இவை நேரடியாக உங்களின் செரிமான மண்டலத்தை தாக்க கூடும். மேலும், வயிறு உப்பசம், மலச்சிக்கல், செரிமான பாதையில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க கூடும்.
- பாதாமில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளதால் இவை கிட்னிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த ஆக்ஸலேட்கள், கால்சியம் சத்தை கிட்னி எடுத்து கொள்ளாத வகையில் தடுக்க கூடியவை. எனவே, அதிக அளவில் பாதாம் சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் கூட உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு நாளைக்கு 25 முதல் 536 mg அளவே உடலில் இருக்க வேண்டும். மீறினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்து விடும். இதனால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
- பாதாம் அதிக அளவில் சாப்பிட்டால் இலவசமாக உங்களின் உடல் எடை கூட தொடங்கி விடுமாம். 1 பாதாமில் 14 முதல் 163 கிராம் அளவு கலோரிகள் இருக்கும். இந்த அளவு அதிகரித்தால் கொழுப்புகளும் கூடி உடல் எடை அதிகரித்து விடும்.
- பாதாமில் உள்ள மாக்னீஸ் அதிக அளவில் நமது உடலுக்கு சென்றால் ரத்தம் அழுத்தம் அதிகரிக்க கூடும். எனவே, இதனை அதிக அளவில் எடுத்து கொண்டால் ஆபத்து.
- பாதாம் அதிகமாக சாப்பிட்டால் மூச்சு திணறல், தோலில் அரிப்புகள், அலர்ஜிகள் உண்டாகும். மேலும் செரிமான கோளாறுகள், வயிற்றில் பகுதியில் பிரச்சினைகள் ஆகியவையும் ஏற்படும்.
- பாதாமில் பாக்டீரியா தொற்றுகளின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. இவை வளரும் போதே இவற்றின் மீது நுண்கிருமிகள் இருக்க கூடும். எனவே, பாதாமை அப்படியே சாப்பிடாமல், கழுவியோ அல்லது சுத்தம் செய்த கடைகளில் விற்கப்படும் பாதாமை சாப்பிடுங்கள்.
எவ்வளவு சாப்பிடணும்?
ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும். அதாவது, 40 கிராம் அளவு மட்டுமே நம் ஒரு நாளைக்கு பாதாமை சாப்பிட வேண்டும்.
முக்கிய குறிப்பு
நீங்கள் சாப்பிடும் பாதாம் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தால் உடனே தூக்கி எறிந்து விடுங்கள்.
ஏனெனில், இவற்றில் hydrocyanic acid என்கிற விஷ தன்மை உள்ளதாம். கசப்பு கொண்ட பாதாமை சாப்பிட்டால் வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, போன்ற பல வித பிரச்சினைகள் உங்களுக்கு உண்டாகும்.