வெறும் வயிற்றில் பூண்டுடன் தேனை இப்படி கலந்து சாப்பிடுங்க: அதிசயம் நடக்குமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பூண்டு உடலுக்கு பல்வேறு வகையில் எண்ணற்ற மருத்துவப்பயன்களை தர கூடிய சக்தி படைத்தது.

அதிலும் பச்சை பூண்டும் தேனும் சேர்த்து சாப்பிடுவது என்பது அத்தனை சுவையான விஷயம் இல்லை.

இருப்பினும் இது உடல் எடையை வேகமாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

அத்தோடு மட்டுமல்லாது இது உங்களுடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது.

அதுமட்டுன்றி பூண்டுடன் தேன் இணையும் போது உடலுக்கு பலத்தை தருகின்றது.

பூண்டும் தேனும் மிக ஆரோக்கியம் நிறைந்த பொருள். இவற்றை நாம் எந்த உணவோடு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட முடியும்.

அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து சாப்பிடுவதால் மிதமிஞ்சிய ஆரோக்கிய விஷயங்கள் நடக்கும்.

பச்சை பூண்டும் தேனும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு போகிறது.

மேலும்.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதோடு கொழுப்பு சேராமலும் பார்த்துக் கொள்கிறது.

எப்படி சாப்பிட வேண்டும்?

நான்கு பல் பூண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக, துருவியோ அல்லது நசுக்கியோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பத்து நிமிடங்கள் வரை ஊற விடவும். தேன் பூண்டுக்குள் நன்கு இறங்க வேண்டும். அல்லது இதை இரவிலே கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்.

வேறு நன்மைகள்
  • சளி, இருமல் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
  • ஜீரண சக்தியை துரிதப்படுத்துவதோடு ஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களையும் சரி செய்கிறது.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் அத்தனையையும் வெளியேற்றுகிறது.
  • கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கிறது. அதோடு இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இது இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers