தொப்பையை குறைக்கும் அத்தி இலை டீ! இப்படி குடிங்க அதிசயம் நடக்கும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

அத்திபழம் பலவித மருத்துவகுணங்களை கொண்டது. ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், பலவித ஆரோக்கிய குணங்கள் இதில் அடங்கியுள்ளது.

அத்திபழத்தில் நிகராக அத்தியின் இலைகளிலும் பல மருத்துவகுணங்கள் உள்ளது.

இதன் இலை புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை தீர்வு தருகின்றது.

அத்தி பழத்தை போன்றே அத்தி இலையிலும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதனை பயன்படுத்தி உடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைத்து விடலாம்.

தற்போது அத்தி இலைகளில் வைத்து தொப்பையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • அத்தி இலைகள் 5
  • நீர் 1 கப்
  • தேன் 1 ஸ்பூன்
  • கண்ணாடி ஜார் 1

தயாரிப்பு முறை

அத்தி இலை டீயை தயாரிக்க சில வழி முறைகள் உள்ளன. அதற்கு முதலில் அத்தி இலையை வெயிலில் உலர வைக்க வேண்டும்.

அடுத்து, இந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு இந்த நீரில் காய்ந்த அத்தி இலை 2 சேர்த்து கொண்டு, நன்றாக கலக்கி வடிகட்டி கொள்ளவும்.

தேவைக்கு ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.தொடர்ந்து குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers